தனக்கு வலிக்கும் என்றால் கவனமாகவும் பிறருக்கு வலிக்கும் என்றால் கவனக்குறைவாகவும் பேசுவது தான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம்.
தன்னை போல தான் எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என்று புரிந்துகொண்டால், யாரிடத்திலும் குறையோ பிழையோ கண்டுபிடிக்கத் தோன்றாது.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நமக்கு நடப்பது எல்லாம் நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் உள்ளது. அறிவுரை கேட்டு திருந்தும் மனிதராக இருக்க வேண்டுமே தவிர, அடிபட்டு திருந்தும் மனிதராக இருக்கக் கூடாது.
எதுவுமே தேவை இல்லை" என்று இருந்தவர்கள்
'நீயே போதும்' என மாறுவதும், "நீயே போதும்" என்று இருந்தவர்கள் 'எதுவுமே தேவை
இல்லை' என மாறுவதுமே வாழ்க்கைக் கற்றுக் கொடுக்கும் ஆகச் சிறந்த மாற்றம்.
எதுவும் நிலையில்லா
இந்த உலகில்
கொஞ்சம்
எதார்த்தமாய் வாழ்ந்து
விட்டுப்போவதில் என்ன
கெட்டுவிடப் போகிறது..?
உங்களை சுற்றி இருப்பவர்களின் பேச்சும் நடத்தையும் அழகாக இல்லை எனில் நீங்கள் உங்கள் மௌனத்தை அழகாக்கி கொள்ளுங்கள் புன்னகையுடன் நகருங்கள்.
எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளது கண்ணியமானதும் கூட.
ஊரே பகையானாலும், உலகமே உங்களை வெறுத்தாலும் வினை வந்து சூழ்ந்தாலும், விஷம் உண்ணத் தந்தாலும் நட்பே துரோகமாய் ஆனாலும்,
நடு முதுகில் குத்தினாலும் எதை நீங்கள் பெற்றாலும்,
எதை நீங்கள் இழந்தாலும் இது இறுதியானது அல்ல என்று மட்டும் நம்புங்கள்.
வாழ்த்துகள்.
#வாழ்க_வளத்துடன்.
கணேசன் பாண்டிச்சேரி
No comments:
Post a Comment