Tuesday, 10 June 2025

தினம் ஒரு புத்தகம்

*தினம் ஒரு புத்தகம்* 
----------------------------------------

நூலில் இடம் பெறும் கட்டுரைகள் எல்லாமே  நாம் வாழ்க்கையில் கவனிக்க மறக்கிற, கவனிக்கத் தவறின அன்றாட நிகழ்வுகள பற்றியதே.

மாணவர்கள் முதல் தொழில் முனைவோர் வரை அத்தனை பேரோட வாழ்க்கையிலும் 
யோசிக்காமல்,  செய்கின்ற விஷயங்களை சுட்டிக்காட்டி அதற்கான அறிவுரையும் வழங்கியிருக்கிறது. புத்தகம் 

நூலிலிருந்து 

நம்முடைய பிள்ளைகளைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோமோ அதில் பாதி அளவு கூட அவர்களைப் பற்றி நமக்கு தெரியாது என்பது தான் உண்மை.

என்னை அடுத்தவர் தோற்கடித்து விட்டார் என்று எப்போதும் புலம்புகிற நாம், நம்முடைய தோல்விக்கு நம்முடைய செயல்பாடுகள் தான் காரணம் என்பதை பல நேரங்களில் புரிந்து கொள்ளுவதில்லை.

நம் வரலாறு நமக்கு சரியாகத் தெரியாத காரணத்தினால் தான் அற்பமான மனிதர்கள் கூட, மிகச்சிறிய நாடுகள் கூட, மிகப்பெரிய நாடுகளைப்போல ஒரு பிம்பம் நமக்குள் ஏற்படுகிறது.

அய்யோ பாவம் தடுக்கி விழுந்தால் தடுமாறிப்போவார்களே என்ற பயத்திலேயே அவர்களைப் பத்திரமாக பிடித்து கொண்டிருந்தோம் என்றால் ஒருநாள் அவர்கள் தடுக்கி விழுகிற போது, எழுவது எப்படி என்று தெரியாமல் தவித்துப்போவார்கள்.

தவறுகளுக்கு பொறுப்பேற்கிறவன் தான் தைரியசாலி.

 நேரம் இங்கே முக்கியமில்லை. அந்த நேரத்தை நாம் எவ்வளவு தரமானதாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

புத்தகத்தோட முன்னுரையில நக்கீரன் கோபால் அவர்கள் கோபிநாத் அவர்களை அரம் என உரைத்திருப்பது பொருத்தமானதே.
 
அரம் என்பது ஆயுதம் அல்ல. ஆயுதங்களை கூர்மை படுத்த உதவும் ஓர் உபகரணம்.

 கோபிநாத் அவர்களின் இந்நூலும் அரமாய்  இளைஞர்களை தீட்டி கூர்மை படுத்தும்.

நூல்- 3X4=13 

கோபிநாத் 

தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்

சாதிக்க விருப்பமா, அவமானப்படுங்கள்.


சாதிக்க விருப்பமா, அவமானப்படுங்கள்.

என்னை நானே யாரென்று புரிய எனக்குத் தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்!

இது உண்மை என்பது போல் அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.

அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கானப் படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.

நம்மை அவமானப்படுத்துவோரைப் பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம்.

நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள்.

ஏற்பட்ட அவமானங்களுக்காகக் குமைந்துக் கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.

நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.

"அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!"

நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?

உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்!

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… .‘நம்மை இவ்வளவு அவமானப்படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.

சோர்ந்துப் போகாதீர்

அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.

எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிடப் பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்துப் போய், அந்தக் காரியத்திலிருந்து விலகி விடுவது.

மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.

சாதிக்க விருப்பமா மனதைப் பக்குவபடுத்துங்கள்.

வாழ்க வளமுடன்.

பானகம் தயாரிக்கும் முறை

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

*பானகம் என்பது தமிழ் மரபு சார்ந்த ஒரு அழகான தர்பாண பானியம்.*

 இது வெயிலில் தாகத்தைத் தணித்து உடலுக்கு தண்மையைக் கொடுக்கும். பானகம் பெரும்பாலும் சாமி விழாக்கள், சுமங்கலி பூஜைகள், சித்திரை திருநாள் ஆகியவற்றில் பரிமாறப்படும்.

இதை செய்யும் முறை மிகவும் எளிமையானது.

🥤 *பானகம் தயாரிக்கும் பொருட்கள் (4 பேருக்கு)* 

 *பொருள் அளவு* 

கருப்புச் சக்கரை 1/2 கப்
எலுமிச்சை சாறு 2 மேசை கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
உலர் இஞ்சி(சுக்கு) பொடி 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்
இளநீர் அல்லது உப்பு இல்லாத சுடுநீர் 2 கப்

🍋 *பானகம் தயாரிக்கும் முறை* 

1. முதலில் கருப்புச் சக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.

2. அதில் எலுமிச்சை சாறு, உலர் இஞ்சி பொடி, ஏலக்காய் பொடி, உப்பு சேர்க்கவும்.

3. நன்கு கிளறி கரைத்துவிட்டு சுவைக்கவும்.

4. தேவைப்பட்டால் சில்லரை அல்லது பனித்துளிகள் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறலாம்.

✅ *பயன்கள்* 

வெப்பத்தைக் குறைக்கும்

தாகத்தைத் தணைக்கும்

ஜீரண சக்தியை அதிகரிக்கும்

உடலுக்கு சக்தி தரும் இயற்கை பானியம்

 *குறிப்பு:*
 கருப்புச் சக்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினாலும் சிறந்தது.

பானகம் என்பது நம் பாரம்பரியத்தின் ஒரு பாகம் மட்டுமல்ல, நலம் தரும் நன்னீர் என்பதற்கான நிரூபணமும் கூட! 💧🌿

Saturday, 31 May 2025

நேசிக்க முடியாது..

தவறு செய்கிறார்கள் என்று வெறுக்க ஆரம்பித்தால்,
வாழ்க்கையில் யாரையும்
நேசிக்க முடியாது.

Friday, 30 May 2025

அன்புக்காக ஏங்காதே...

    
அன்புக்காக ஏங்காதே!! அது உனக்குளே தான் இருக்கிறது!! நம் ஏக்கமே நம்மை நாம் உணரத்தான்!!
வெளியில் தேடிக்கொண்டு இருந்தால் அதற்கு முடிவே இல்லை!! எது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அழகான வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது; ஆனந்தமாக வாழுங்கள்!!
Ganesan Pondicherry 

உன்னை யாருடனும் ஒப்பிட்டு வாழாதே..

   
வாழ்வில் உனக்கு மேலே உள்ளவர்களை பார்த்து ஒருபோதும் ஏங்காதே; தாழ்வு மனப்பான்மை வரும்!! உனக்கு கீழே உள்ளவர்களை ஏளனமாய் பார்க்காதே; தலைக்கனம் வரும்!! உன்னை யாருடனும் ஒப்பிடாமல், நீ நீயாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை வரும்!!....
Ganesan Pondicherry 

Wednesday, 28 May 2025

நாளை.. உங்களுக்காக மாறலாம்

எல்லாம் முடிந்ததென சோர்வடையும் போது, சில நிமிடம் எட்டிப்பார்க்கும் சிறு தைரியத்தை பிடித்துக்கொண்டு மேலே வந்துவிடுங்கள். நாளை உங்களுக்கென மாறலாம்.
Ganesan Pondicherry