*தினம் ஒரு புத்தகம்*
----------------------------------------
நூலில் இடம் பெறும் கட்டுரைகள் எல்லாமே நாம் வாழ்க்கையில் கவனிக்க மறக்கிற, கவனிக்கத் தவறின அன்றாட நிகழ்வுகள பற்றியதே.
மாணவர்கள் முதல் தொழில் முனைவோர் வரை அத்தனை பேரோட வாழ்க்கையிலும்
யோசிக்காமல், செய்கின்ற விஷயங்களை சுட்டிக்காட்டி அதற்கான அறிவுரையும் வழங்கியிருக்கிறது. புத்தகம்
நூலிலிருந்து
நம்முடைய பிள்ளைகளைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோமோ அதில் பாதி அளவு கூட அவர்களைப் பற்றி நமக்கு தெரியாது என்பது தான் உண்மை.
என்னை அடுத்தவர் தோற்கடித்து விட்டார் என்று எப்போதும் புலம்புகிற நாம், நம்முடைய தோல்விக்கு நம்முடைய செயல்பாடுகள் தான் காரணம் என்பதை பல நேரங்களில் புரிந்து கொள்ளுவதில்லை.
நம் வரலாறு நமக்கு சரியாகத் தெரியாத காரணத்தினால் தான் அற்பமான மனிதர்கள் கூட, மிகச்சிறிய நாடுகள் கூட, மிகப்பெரிய நாடுகளைப்போல ஒரு பிம்பம் நமக்குள் ஏற்படுகிறது.
அய்யோ பாவம் தடுக்கி விழுந்தால் தடுமாறிப்போவார்களே என்ற பயத்திலேயே அவர்களைப் பத்திரமாக பிடித்து கொண்டிருந்தோம் என்றால் ஒருநாள் அவர்கள் தடுக்கி விழுகிற போது, எழுவது எப்படி என்று தெரியாமல் தவித்துப்போவார்கள்.
தவறுகளுக்கு பொறுப்பேற்கிறவன் தான் தைரியசாலி.
நேரம் இங்கே முக்கியமில்லை. அந்த நேரத்தை நாம் எவ்வளவு தரமானதாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.
புத்தகத்தோட முன்னுரையில நக்கீரன் கோபால் அவர்கள் கோபிநாத் அவர்களை அரம் என உரைத்திருப்பது பொருத்தமானதே.
அரம் என்பது ஆயுதம் அல்ல. ஆயுதங்களை கூர்மை படுத்த உதவும் ஓர் உபகரணம்.
கோபிநாத் அவர்களின் இந்நூலும் அரமாய் இளைஞர்களை தீட்டி கூர்மை படுத்தும்.
நூல்- 3X4=13
கோபிநாத்
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
No comments:
Post a Comment